ரஸீன் ரஸ்மின் / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் விற்பனை செய்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ள ஒரு தொகை சிகரெட் பெட்டிகளுடன், சந்தேகநபர் ஒருவர், நேற்று (26) கைதுசெய்யப்பட்டுள்ளாரென, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், புத்தளம் நகரில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, குறித்த சிகரெட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இரண்டு வகைகளைச் சேர்ந்த பெட்டிகளில் அடைக்கப்பட்ட 4,600 சிகரெட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன என்பதுடன், சந்தேகத்தின் பேரில் புத்தளம் பொலிஸாரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட குறித்த சிகரெட்களை, சந்தேகநபர் தனது வீட்டில் வைத்திருந்து, இரகசியமான முறையில் புத்தளம் நகர வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார் என, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.எம். அனுர குணவர்தன தெரிவித்தார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள புத்தளம் பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago