முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூன் 27 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - சிலாபம் வீதியின் மதுரங்குளி, செம்பட்டை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞரொருவரை மோதிவிட்டு தப்பிச்சென்ற லொறியொன்றின் சாரதியை, 8 நாட்களுக்குப் பின்னர் திங்கட்கிழமை கைது செய்ததாக, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவத்தில், செம்பட்டை பிரதேசத்தைச் சேர்ந்த நயன குமார எனும் 17 வயது இளைஞன் உயிரிழந்திருந்தார். விபத்தில் உயிரிழந்த இளைஞன், தனது இரு நண்பர்களுடன், புத்தளம் - சிலாபம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போதே, இவ்விபத்து சம்பவித்திருந்தது.
விபத்துடன் தொடர்புடைய லொறி, அவ்விடத்தில் நிற்காது பயணித்திருந்த நிலையில், முந்தலிலிருந்து புத்தளம் வரையிலான வீடுகள் மற்றும் நிறுவனங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கமெராக்களின் மூலம் பெறப்பட்ட வீடியோப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, மன்னார், பேசாலை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் லொறி கைப்பற்றப்பட்டதுடன், சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
லொறியை பரிசோதனை செய்தபோது, விபத்து இடம்பெற்ற இடத்தில் கிடந்த லொறியின் உடைந்த பாகங்கள் அந்த லொறியினுடையது என்பதையும் விபத்தால் அந்த லொறி சேதத்துக்கு உள்ளாகியிருந்ததையும் பொலிஸார் அடையாளம் கண்டுகொண்டனர்.
லொறியின் சாரதியை, புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
19 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
33 minute ago
2 hours ago
2 hours ago