2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

’திரபீடகத்தை உலக மரபுரிமையாக்கியமை முக்கிய நடவடிக்கை’

Editorial   / 2019 மார்ச் 23 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மரபுரிமையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள திரபீடகத்தை, உலக மரபுரிமையாக ஆக்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் நாட்டின் பௌத்த சமூகத்தின் மத்தியிலும் சர்வதேச ரீதியாகவும் ஆன்மீக அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கையாகும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வாரியபொல ஸ்ரீ விசுத்தாராம மகா விஹாரையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தரின் திருவுருவச் சிலையை திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்வு, நேற்று (22) இடம்பெற்றது. இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

திரிபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் போன்று, அதனுடன் இணைந்ததாக “திரிபீடகாபிவந்தனா” வாரத்தை பிரகடனப்படுத்தியது பற்றி பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வர்த்தக சமூகத்தில், நாளுக்கு நாள் பின்னடைந்துச் செல்லும் ஆன்மீக பண்பாடுகளை, மீண்டும் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பி, நாட்டில் ஆன்மீக அபிவிருத்தியொன்றை ஏற்படுத்துவதற்கு எடுத்த முக்கிய நடவடிக்கையாகவே, இந்த நடவடிக்கையை குறிப்பிட முடியும் என்று குறிப்பிட்டார்.

திரிபீடகம், பௌத்த தத்துவம் ஆகியன தொடர்பாக, நாட்டு மக்களின் அறிவை மேம்படுத்துவதன் மூலம், நல்ல பண்பாடுகளுடன் கூடிய சிறந்ததோர் சமூகத்தை, நாட்டில் உருவாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X