Editorial / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரன் பிரியங்கர
நொச்சியாகம பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த சிறிய ரக லொறி ஒன்று, சிரம்பியடி பகுதியில் வைத்து, இன்று (04) பிற்பகல், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்த நிலையில், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், லொறியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்துள்ளனர். இவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக வேகத்துடன் பயணித்தமையே விபத்துக்குக் காரணமென பொலிஸார் தெரிவித்தனர். லொறியின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக, புத்தளம் வைத்தியசாலையிலிருந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
45 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago