Princiya Dixci / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் - தம்புள்ளை வீதியில் தல்கொடபிட்டிய பிரதேசத்தில் வான் ஒன்று, குருநாகலில் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார்சைக்கிளுடன் மோதியதில் நான்கு வயது சிறுமி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தனது பெற்றோருடன் மோட்டர்சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நான்கு வயதுடைய செசனி செனவிரத்ன எனும் சிறுமியே செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் பெற்றோர், படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், கெக்கிராவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் விபத்துக்கு காரணமான வான் சாரதியை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago