Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
கொச்சிகடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடன்காவ பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, மணல் தோண்டுவதற்காக வெட்டப்பட்ட குழியில் நீராடச் சென்ற 13 வயதுடைய சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நீர்கொழும்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த தோப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் தரம் 8இல் கல்வி பயின்ற உடன்காவை பிரதேசத்தில் வசிக்கும் ரஞ்சித் குமார் தினுஸ், ஒத்பேரிய பிரதேசத்தில் வசிக்கும் ராமகிருஷ்ணன் பிரியதர்சன் என்ற இரு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மாணவர்கள் சிலர் உடன்காவ பிரதேசத்தில் உள்ள மைதானத்தில் விளையாடியுள்ளனர். இவர்களில் மூன்று மாணவர்கள் அருகில் உள்ள மணல் தோண்டுவதற்காக வெட்டப்பட்ட நீர் நிறைந்த குழியில் குளித்துள்ளனர். இதன்போது அந்த சிறுவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். அதில் ஒரு சிறுவன் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு, நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நீரில் மூழ்கிய இரு சிறுவர்களினதும் சடலங்கள் பின்னர் மீட்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago