Princiya Dixci / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம். சனூன்
புத்தளம், வடக்கு எல்லைப்புர கிராமமான கரைத்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை பெற்றுத்தருமாறு கோரி, வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஆர்.என்.அசனா மரைக்கார் வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புத்தளம் மாவட்டத்தில் வண்ணாத்திவில்லு பிரதேச சபை பிரிவில் அமைந்துள்ள மிகவும் கஷ்டப்பட்ட பிரதேசமான கரைத்தீவு கிராமத்தில் 65 ஆண்டு காலமாக இந்த வைத்தியசாலை இயங்கி வருகிறது.
இங்கு ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளர்கள் மருந்துகளை பெற்றுக்கொள்கின்றனர். இங்கு நிரந்தர வைத்தியராக சேவையாற்றிய வைத்தியர் வீரக்கொடி மூன்று வருடங்களுக்கு முன்பு மாற்றமாகி சென்றதன் பின்பு இதுவரையும் நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.
ஆபத்தான நிலையில் இங்கு கொண்டு வரப்படும் நோயாளர்கள், புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவேண்டிய நிலையே ஏற்படுகிறது. 2015 செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் இதன் நிமித்தம் 55 வயதுக்குட்பட்ட 10 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
எனவே, பொது மக்களின் நிலையை கருத்திற்கொண்டு மேற்படி கரைத்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை உடனடியாக பெற்றுத்தருமாறு வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
25 minute ago
55 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago
57 minute ago
2 hours ago