2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

நெல்லை விற்பனை செய்வதில் விவசாயிகள் சிரமம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

ஆனமடுவ நெல் விற்பனை நிலையத்தில் நெல்லை விற்பனை செய்வதற்காக செல்லும் தாங்கள், வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் இதனால் தாம் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

ஆனமடுவ, நவகத்தேகம, இங்கிரிய, மஹாஉச்வௌ மற்றும் கோட்டுகச்சிய ஆகிய பிரதேசங்களிலிருந்து லொறி மற்றும் டிரக்டெர்களில் நெல் கொள்வனவு நிலையத்துக்கு செல்லும் தாங்கள்,  நெற்களை விற்பனை செய்ய முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர். 

இது குறித்து ஆனமடுவ நெல் கொள்வனவு நிலைய பொறுப்பதிகாரி பி.எம் சஜித்குமாரவிடம் வினவிய போது 'தரமான மற்றும்  முறையாக தரப்படுத்தப்பட்ட நெற்களை விற்பனைக்கு எடுத்துக்கொண்டு வருமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதாக' தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X