Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-றொஷான் துஷார
வடமத்திய மாகாணத்தில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக, ஹபரண மற்றும் பொலன்னறுவை வனப்பகுதிகளிலுள்ள காட்டு யானைகள் நீர் தேடி மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதிக்கு வருவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுமாத்திரமின்றி, அவ்வனப்பகுதிகளிலுள்ள ஏரிகள், நீர்நிலைகள் என்பன வற்றிக் காணப்படுவதால் அங்குள்ள ஏனைய விலங்குகளும் நீர் தேடி கிராமங்களுக்குள் புகுவதாகவும் தெரிவித்தனர்.
இதனைக்கருத்திற் கொண்டு, பொலன்னறுவை புனித பூமியில் தண்ணீர்த் தொட்டிகளை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நிலவும் வரம்சியால் பொலன்னறுவை மாவட்டத்தில் 2708 குடும்பங்களைச் சேர்ந்த 8,554 பேர்; பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
55 minute ago