Editorial / 2017 ஜூன் 18 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட 2,089 நட்சத்திர ஆமைகளை, இன்று (18) அதிகாலை கைப்பற்றியுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
புத்தளம், கற்பிட்டி, இப்பந்தீவுக் கடற்பகுதியில், சந்தேகத்துக்கிடமான படகு ஒன்றைக் கடற்படையினர் சோதனைக்குட்படுத்திய போது, 4 பைகளில் கட்டி வைக்கப்பட்ட நிலையில், குறித்த ஆமைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், அப்படகிலிருந்த இருவரையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கற்பிட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த அவ்விருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே, சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனக் கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்த நட்சத்திர ஆமைகள், நன்கு பொதி செய்யப்பட்டிருந்ததாகவும் வேறு ஒரு நாட்டுக்குக் கொண்டுசேர்க்கும் முகமாகவே, இவை இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதற்கான மத்திய நிலையமாக இலங்கையை, இவர்கள் பயன்படுத்தியுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும், மேலதிக நடவடிக்கைகளுக்காக, சின்னப்பாடு சுங்க அலுவலகத்தில் ஒப்படைத்ததாக, கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
11 minute ago
40 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
40 minute ago
54 minute ago
1 hours ago