Editorial / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன், ரஸீன் ரஸ்மின், முஹம்மது முஸப்பிர்
உப குழுக்களுக்கான நிலைமாற்று நீதி பொறிமுறை தொடர்பான பயிற்சிப் பட்டறையொன்று, புத்தளம் - குருநாகல் வீதியில் அமைந்துள்ள சேனாதிலக விடுதியில் சனிக்கிழமையும் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் (19, 20) நடைபெற்றது.
“சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்தச் செயலமர்வை, தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து, ஒடெப்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
புத்தளம் பிரதேசத்தின் தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள், அரசியல் துறை சார்ந்தவர்கள், கிராமிய அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள், பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலரும் இச்செயலமர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
தேசிய ஊடக மையத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான சட்டத்தரணி ஜகத் லியன ஆரச்சி பிரதான வளவாளராகக் கலந்துகொண்டார். மொழி பெயர்ப்பாளராக ஆசிரியர் எம். நாஸிர் கலந்துகொண்டார்.
தேசிய சமாதானப் பேரவையின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுக்கு பொறுப்பாளரான ஸுபாஷினி, ஒடெப்ட் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் ஏ. முஸ்னியா ஆகியோரும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
நிலைமாற்று நீதி பொறிமுறை தொடர்பான அறிவை விருத்தி செய்தல், வேற்று நாடுகளில் நடைமுறையில் உள்ள நிலைமாற்று நீதி பொறிமுறை சார் அறிவை வழங்குதல், இலங்கை நாட்டில் நடைமுறையில் உள்ள நிலைமாற்று நீதி பொறிமுறைகள், அவை எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது, அதன் முன்னேற்றம் போன்றவற்றைக் கற்றுக்கொள்ளல், நிலைமாற்று நீதி பொறிமுறை பற்றி கலந்துரையாடவும், ஊக்குவிக்கவும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளல் ஆகியவற்கை இலக்காகக் கொண்டு, இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025