2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் மே தின நிகழ்வு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன், ரஸீன் ரஸ்மின்

“பலம் வாய்ந்த சிவில் சமூக அமைப்பை கட்டி எழுப்ப ஒன்றிணைவோம் - இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய ஒருமைப்பாட்டை கட்டி எழுப்புவோம் - தொழிலார் உரிமைகளை மேம்படுத்த உழைப்போம்“ எனும் தொனிப்பொருளில் மே தின நிகழ்வுகள், புத்தளம் வெட்டுக்குளம் சந்தியில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

புத்தளம் பெரிய பள்ளி, அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் புத்தளம் கிளை, இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் புத்தளம் கிளை உள்ளிட்ட பொது நல அமைப்புகள், இந்த மே தின நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

புத்தளம் மக்கள் குரலின் தலைவர் சமந்த கோரல ஆராச்சி, கட்டைக்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் மஹா வித்தியாலய அதிபர் என். நாகராஜா மற்றும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் உதவி தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். ஹுஸைர் ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X