2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புத்தளம் மாவட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2016 ஜனவரி 22 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

நாடு முழுவதிலும் மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு மின்சார இணைப்புக்களை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கமைய புத்தளம் மாவட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், வியாழக்கிழமை காலை புத்தளம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.நியாஸ், இனோக் துஷார, என்.டி.எம்.தாஹிர், முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த, பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், மின்சார சபை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

அரசாங்கத்தின் 'நாடு ஒளிபெற்றது - இருள் மறைந்தது, தேசிய மின்சார உதவி' எனும் திட்டத்தின் கீழ் இதுவரை மின்சார இணைப்பில்லாமல் இருக்கும் சகல வீடுகளுக்கும் விரைவாகவே மின்சார இணைப்புக்களை வழங்கும் பணிகள் புத்தளம் மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

புத்தளம் மாவட்டத்தில் சுமார் 11 ஆயிரம் வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாகவும் அந்த அனைத்து வீடுகளுக்கும் கூடிய விரைவிலேயே மின்சார இணைப்புக்களை வழங்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளும் மின்சாரத்தைப் பாவிக்கும் நிலைமை உருவாக்கப்படும் என மின்சார பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா இதன்போது தெரிவித்தார்.

புத்தளம், முந்தல், வண்ணாத்திவில்லு மற்றும் கல்பிட்டி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இத்திட்டம் துரித கெதியில் மேற்கொள்ளப்படுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டதோடு எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X