2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னகோன்

பொலன்னறுவை, கதுருவெல முஸ்லிம் காலனிப் பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் புதையல் தோண்டிய நால்வரை, நேற்று புதன்கிழமை (20) பொலன்னறுவைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும், மாகொல, கல்கிஸை, மருதானை மற்றும் கதுருவெலப் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

மலசலகூடத்துக்கான குழி தோண்டுவதாகக் கூறியே இவர்கள் சுமார் 12 அடிக்குக் புதையல் தோண்டியுள்ளதாகவும் இதற்காக இவர்கள்  பயன்படுத்திய ஆயுதங்கள், பூஜைப் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலன்னறுவைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X