Princiya Dixci / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவில் போதியளவான வசதிகள் இல்லாமையினால் சிகிச்சைக்காக அங்குவரும் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்தியர் துஷாரி ஹபுராச்சி கருத்து தெரிவிக்கையில்,
தேவையான வசதிகள் இன்மையால் நோயாளிகள் நீண்ட நாட்களாக அசௌகரியத்துக்குள்ளாகின்றனர். குறித்த பிரிவில் 30 கட்டில்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், 65 நோயாளர்கள் தினசரி சிகிச்சைக்கு வருகின்றனர்.
இவ்வருடம் மாத்திரம் 1,300 புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஆண்டொன்றுக்கு 20,000 நோயாளர்கள் சிகிச்சையின் பொருட்டு இங்கு வருகை தருகின்றனர். மாதமொன்றுக்கு 50 இலிருந்து 55 நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைபெறும் நோயாளர்களாக உள்ளனர்.
அவர்களுக்கு போதுமான இடவசதியோ, கட்டட வசதிகளோ, மருத்துவ வசதிகளோ மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே காணப்படுகின்றன. சிறுவர்களுக்கான சிகிச்சையை வழங்க போதிய இடவசதியின்மையால் கொழும்பு, மஹரகம வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
புதிய அரசாங்கத்திடம் நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எங்களது கோரிக்கையான ஐந்து மாடிக்கட்டத்தையும் இடவசதி வாய்ப்புக்களையும் வெகு விரைவில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே என்றார்.
26 minute ago
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
1 hours ago