2025 மே 05, திங்கட்கிழமை

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அபிவிருத்திக்கு நிதி வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கென 34 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

குறித்தக் கூட்டுறவுச் சங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக நிதியொதுக்கீடு செய்து தருமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீனிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிக்கான காசோலை அமைச்சர் ரிசாத் பதியுதீன், புத்தளம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எல்.எஸ்.சிந்தக்கவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இந்த நிதியின் மூலம் புத்தளம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் இயங்குகின்ற மூன்று வங்கிகளைக் கணினி மயப்படுத்துவதற்கு 9 இலட்சம் ரூபாவும், புத்தளம் தில்லையடிப் பிரதேசத்திலுள்ள கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு 26 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X