2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பல்கலைக்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மாவட்ட பட்டதாரிகள் அமைப்பு,  புதிதாக பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் வகையில், நேற்று முன்தினம் (08) மதுரங்குளி  ட்ரீம் வரவேற்பு மண்டபத்தில்  நிக​ழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.


இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலிசப்ரி ரஹீம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது,  பல்கலைக்கழகத்துக்கு  தெரிவான மாணவ, மாணவிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி  கௌரவிக்கப்பட்டதுடன், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மக்களுக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி,  புத்தளம் மாவட்ட பட்டதாரிகள் அமைப்பினர் அவருக்கு பொன்னாடை போர்த்தி,  நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .