Kogilavani / 2015 நவம்பர் 06 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னக்கோன்
பொலன்னறுவையில் இன்று காலை தனியார் பஸ்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளடன் இவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து பொலன்னறுவை நோக்கிச் சென்ற பஸ்ஸும் பொலன்னறுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்களின் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்கள் தொடர்ந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



23 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
25 minute ago
1 hours ago