Editorial / 2019 பெப்ரவரி 08 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்
இலஞ்சம் வாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அநுராதபுரம், ஹொரவ்பொத்தான றுவன்வெலி மத்திய மகா வித்தியாலய அதிபர், இலஞ்சம் வாங்கவில்லையெனத் தெரிவித்து, பெற்றோர்கள், நேற்று (07) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிய எம் டி.எம். பண்டார, பெற்றோர் ஒருவரிடமிருந்து 5,000 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், கடந்த ஐனவரி மாதம் 31ஆம் திகதி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதிபருக்கு ஆதரவு தெரிவித்தும், அவ்வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் 60க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், பாடசாலைக்கு முன்பாக, இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
5,000 ரூபாய் பணத்தை, அதிபர் இலஞ்சமாகப் பெறவில்லை எனவும் பாடசாலையின் அபிவிருத்திக்காகவே அப்பணத்தை அவர் பெற்றுக்கொண்டார் எனவும், பெற்றோர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், தனிப்பட்ட கோபத்துக்காக, அதிபருக்குப் பணம் கொடுத்து, திட்டமிட்டு அவரைக் கைதுசெய்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த பெற்றோர்கள் தெரிவித்தனர்.
பாடசாலையில் 2 பேன்ட் வாத்தியக் குழுவினர் இருப்பதாகவும் அவர்களுக்கான ஆடைகளைப் பெற்றுக் கொள்வதற்கே மேற்படி பணம் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்த பெற்றோர்கள், வாங்கப்பட்ட பொருட்களையும் முன்னால் வைத்த வண்ணம், பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago