2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பாதையை புனரமைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூன் 29 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட உடப்பு செல்வபுரம் பாரிபாடு வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரி, அப்பிரதேச மக்கள், இன்று காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடப்பில் இருந்து செல்வபுரம் ஊடாக பாரிபாடு செல்லும் சுமார் 5 கிலோமீற்றர்  வீதி, பல வருடங்களாகப் புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாகவும் காணப்படுகின்றது.

மழை காலங்களில் சேறாகவும் வெயில் காலங்களில் தூசி நிறைந்தும் இவ்வீதி காணப்படுவதால், மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக, போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சுட்டிக்காட்டினார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X