Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூலை 18 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் இயங்கும் நான்கு பாலர் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு, உலக வங்கியின் மூலம் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக, முந்தல் பிரதேச செயலக மகளிர் விவகார சிறுவர் பிரிவின் அதிகாரி தெரிவித்தார்.
ஹிதாயத்நகர், அல் ஹிமா பாலர் பாடசாலை, சமீரகம அல் இர்பானியா பாலர் பாடசாலை, பெருக்குவட்டான் அல் இம்ரா பாலர் பாடசாலை மற்றும் கணமூலை தெற்கு அல் நூராணியா ஆகிய பாலர் பாடசாலைகளுக்கே, தலா நான்கு இலட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் இயங்கும் பாலர் பாடசாலைகளின் நிலைமைகள் தொடர்பான ஆய்வு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர், முந்தல் பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மற்றும் ஊக்குவிப்பு அபிவிருத்தி அதிகாரியினால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, 72 பாலர் பாசடாலைகள் தொடர்பான அறிக்கை, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்குக்கு அனுப்பப்பட்டதோடு அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே, இந்த பாலர் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago