2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்டிய அறுவர் கைது

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூலை 15 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரலங்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான தென்னந் தோட்டமொன்றில், புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேரைக் கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து நேற்றுக் காலை குறித்த தோட்டத்தை சுற்றிவளைத்த  முந்தல் பொலிஸார், சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.

வெளி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான தென்னந்தோட்டம் ஒன்றிலேயே இவ்வாறு புதையல் தோண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையின் போது, அங்கிருந்து புதையலைக் கண்டறியும்  கருவியுடன் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் வேறு உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த முந்தல் பொலிஸார், சந்தேகநபர்களை, புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன் ஏக்கநாயக்கா தலைமையிலான குழுவினரே, இந்நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X