Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(துஷார தென்னகோன்)
பொலன்னறுவையில் தொல்பொருள் ஆராய்ச்சிக்குரிய இடத்தில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரும் முன்னாள் அதிபர் ஒருவரும் அடங்குகின்றனர் என, பொலன்னறுவைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த தனது தாயார் கனவில் தோன்றி, புதையல் இருப்பதாகவும் அதனை எடுக்குமாறும் வலியுறுத்தியதாக நபர் ஒருவர், நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கனவில் தோன்றியதாகக் கூறப்படும் இடத்தில் பூஜைகள் மேற்கொண்டு, புதையல் தோண்ட ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, சந்தேக நபர்கள் ஐவர், ஆயுதங்கள் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சிக்குரிய இடத்தில் புதையல் தோண்டியதால், அது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம், பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
9 minute ago
22 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
33 minute ago
49 minute ago