2025 மே 02, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசார் தீன்

புத்தளம் நகரிலுள்ள கடைத் தொகுதியின் மாடியிலிருந்து, இனந்தெரியாத ஆணின் சடலம் ஒன்று,  இன்று (28) கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

துர்நாற்றம் வீசியதையடுத்து தேடிச் சென்ற வேளை குறித்த  சடலம் காணப்பட்டதை  அவதானித்துள்ளனர். இதனையடுத்து, புத்தளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில்,  குறித்த இடத்துக்கு பொலிஸார் நேரில் சென்று சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதோடு , பல நாட்களுக்குமுன்பே உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார்  தெரிவித்தனர். கொலையா,  தற்கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் விசாரணை  முன்னெடுக்கப்படுகிறது.

சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X