Editorial / 2019 மார்ச் 12 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
புத்தளம்- முள்ளிபுரம் கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரியை தாக்கியவரை, கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி, புத்தளம் பிரதேச செயலகத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (12) இடம்பெற்றது.
புத்தளம் -முள்ளிபுரம் கிராம சேவையாளர் பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி ஜே.எம். ஜெஸீம், திங்கட்கிழமை காலை அலுவலகத்தில் வைத்து தாக்கதலுக்கு இலக்கானார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவத்தே, புத்தளம் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்கள், சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் புத்தளம் பிரதேச செயலக அதிகாரிகளும் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"சமுர்த்தி அதிகாரி மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்" "அலுவலகத்துக்குள் தாக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது" "மக்களுக்கு சேவையாற்றும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடு " என்கின்ற வாசகங்களை கொண்ட சுலோகங்களையும் ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago