Editorial / 2020 பெப்ரவரி 06 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
கொழும்பு தொடக்கம் வவுனியா வரை சேவையில் ஈடுபட்ட, வென்னப்புவ டிப்போவுக்குச் சொந்தமான, இ.போ.ச பஸ் சாரதி மீது, இன்று (06) காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், புத்தளம்- கீரியங்கள்ளி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு வரை சேவையில் ஈடுபட்ட தனியார் பஸ்ஸில் பயணித்த இளைஞனே தன்னைத் தாக்கியதாக, இ.போ.ச பஸ் சாரதி, பத்துளுஒயா பகுதியிலுள்ள பொலிஸ் காவலரனில் பாதுகாப்புக் கடமையிலிருந்த பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த இரண்டு பஸ்களும் முந்தல் கீரியங்கள்ளி பகுதியில் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்டபோது, இரண்டு பஸ்களின் சாரதிகள், நடத்துநர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு இவர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டபோது, புத்தளம் - கொழும்பு தனியார் பஸ்ஸில் பயணித்த நபரொருவர், இ.போ.ச பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அங்கு சில மணிநேரம் நேரம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பஸ்களில் பயணம் செய்த பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பின்னர் தாக்குதல் நடத்திய இளைஞன், இ.போ.ச பஸ் சாரதியிடம் பொலிஸார் மற்றும் பயணிகள் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய பின்னர், குறித்த இரண்டு பஸ்களும் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago