2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் கடையடைப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 23 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட, தேசிய துக்க தினத்தை முன்னிட்டு, புத்தளம் நகரில் சகல வியாபார நிலையங்களும் இன்று (23)  மூடப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களுக்கு பலத்த கண்டங்களை தெரிவித்தும்,  இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும், புத்தளம் நகரின் சகல நகை கடைகளும் இரண்டாவது நாளாகவும் மூடப்பட்டுள்ள.

புத்தளம் நகரின் சகல கடைகளும் மூடப்படுவதற்கு எந்த அமைப்புகளோ அல்லது எந்த நிறுவனங்களோ அழைப்பு விடுக்காத நிலையிலும், கடை அடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சகல கடைகளிலும், வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதுடன், புத்தளம் நகரம் எங்கும் வெள்ளை நிற பந்தல்களினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளி பிரதான வாயிலில், மிலேச்சத்தனமான இந்த கொடூர வன்செயலை, வன்மையாக கண்டிப்பதாக பதாகை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X