2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் நந்திக்கொடி வாரம் அனுஷ்டிப்பு

எம்.யூ.எம். சனூன்   / 2017 ஜூன் 18 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நந்திக் கொடி வாரத்தையொட்டி, புத்தளம் நகரில் நந்திக் கொடிகள் விற்பனை, சனிக்கிழமை (17) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அகில இலங்கை ரீதியாக அறநெறிப் பாடசாலைகளுக்கு நிதி திரட்டும் முகமாக, இந்து சமய கலாசார திணைக்களத்தால், இந்த நந்திக் கொடி விற்பனை வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

புத்தளம் இந்து சமய கலாசார திணைக்கள உத்தியோகத்தர் நிமல ரஞ்சனி தில்லையடி, முருகன் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தாராம குருக்களுக்கு முதலாவது நந்திக் கொடியை வழங்கி, நந்தி கொடி விற்பனையை  ஆரம்பித்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்து சமய கலாசாரத் திணைக்கள உத்தியோகத்தர் நிமல ரஞ்சனி, தில்லையடி முருகன் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தாராம குருக்கள், புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதம குரு பாலகிருஷ்ணன் குருக்கள், புத்தளம் பொம்மக்கன் ஆலயத்தின் பிரதம குரு விஜயகுமார் சர்மா உள்ளிட்ட இந்து மத குருமார்கள் இணைந்து, புத்தளம் வாழ் இந்து மக்கள் மத்தியில் நந்தி கொடியை விநியோகம் செய்து வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X