ஹிரான் பிரியங்கர / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டத்தில் நிலவி வரும் வரட்சி காரணமாக இதுவரை பத்தாயிரம் தென்னை மரங்கள் அழிவை எதிர்நோக்கியுள்ளதாக, தெங்கு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2012ஆம் ஆண்டிலும் இவ்வாறான வரட்சி நிலவிய போது, சுமார் மூவாயிரம் தென்னைமரங்கள் அழிவடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நீர் நிலைகளில் நீர் வற்றியுள்ளதன் காரணமாக, தென்னை மரங்களை முறையாகப் பாதுகாக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.
எனினும், ஒரு சிலர், தென்னை மரங்களுக்கு நீர் ஊற்றி அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், புத்தளம் மாவட்டத்தில் தொடரரும் வரட்சி காரணமாக பெருமளவிலான தென்னை மரங்கள் நீர் இன்றி அழிவை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago