ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூலை 11 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன, புத்தளம் தள வைத்தியசாலைக்கு, எதிர்வரும் 17ஆம் திகதி விஜயம் செய்யவுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி ஆகியோர், அண்மையில் சுகாதார அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், புத்தளம் தள வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
குறித்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர், எதிர்வரும் 17ஆம் திகதி புத்தளத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி தெரிவித்தார்.
சுகாதார அமைச்சரின் இவ்விஜயத்தின் போது, புத்தளம் தள வைத்தியசாலை மற்றும் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளணி, பௌதீக வளப்பற்றாக்குறை உள்ளிட்ட இரு வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago