Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரன் பிரியங்கர
அதிக வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமையால், புத்தளம்- அநுராதபுரம் வீதியுடனான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாக, புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் அதிக மழை பெய்து வருவதையிட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறித்த வீதியில் பயணம் செய்த சாரதிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதே குறித்த வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக, தம்போவ நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.
வௌ்ளப் பெருக்கின்போது, குறித்த வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகங்களை செலுத்துமாறும், அதிக வேகத்தில் பயணிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago