2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் விபத்து ; அறுவர் காயம்

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஜூலை 01 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் மற்றும் பெண் உட்பட ஆறு பேர் காயமடைந்த நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளத்தில் இருந்து பாலாவியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறியொன்று, அதே திசையில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போதே, இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்விபத்தில் லொறியில் பயணித்த சாரதி உட்பட நான்கு பேரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய், மகன் உள்ளடங்களாக ஆறு பேர் காயமடைந்த நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், விபத்துக்குள்ளான லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை, விபத்துடன் சம்பந்தப்பட்ட லொறியின் சாரதி காயத்துக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும்  அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன். விபத்துச் சம்பவத்தில் காயமடைந்த ஐவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில், புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X