Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
எம்.யூ.எம். சனூன் / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் புத்தளம் நகர சபைக்கு வேட்பாளர்களை அடையாளப்படுத்தும் வேலைகளில் அரசியல் கட்சிகள் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றதைக் காணமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி தமது கூட்டுக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதுடன், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஆசன ஒதுக்கீடு தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்திவருவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஏனைய இதர கட்சிகளுடன் சேர்ந்து பொதுஜன ஐக்கிய முன்னணி, புத்தளம் நகர சபைக்கு வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் வேட்பாளர்களை சேர்க்கும் பணிகளை ஆரம்பித்துள்ளன.
இது தொடர்பிலான கூட்டமொன்று, அண்மையில் புத்தளம் நெடுங்குள வீதியில் அமைந்துள்ள கட்சியின் முக்கியஸ்தர் வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, புத்தளம் நகர சபைக்கு பொது ஜன ஐக்கிய முன்னணி சார்பில் ஒன்பதாம் வட்டார வேட்பாளராக களம் இறங்க சிரேஷ்ட ஊடகவியலாளர், சமாதான நீதவான், தேசமான்ய இர்ஷாத் றஹ்மதுல்லாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர், தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்த முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமேல் மாகாண சபையின் வேட்பாளருமாவார்.
அதேவேளை புத்தளம் மாவட்ட தமிழ், முஸ்லிம் ஊடகவியாலாளர் ஒன்றியத்தின் பிரதித் தலைவராகவும் செயற்பட்டு வருவதுடன், பல சர்வதேச ஊடகங்களின் செய்தியாளராகவும் பணியாற்றிவருகின்றார்.
மக்கள் பிரச்சினை தீர்ப்பதில் இர்ஷாத் றஹ்மத்துல்லா எல்லா சந்தர்ப்பங்களிலும் முன்னின்று செற்பட்டுவரும் ஒரு சமூக சேவையாளர் என்பதுடன், அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஊடகச் செயலாளராக பணியாற்றியுள்ளதுடன் தற்போது இணைப்பு செயலாளராக கடமை புரிகின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
2 hours ago
2 hours ago