2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் நகரில் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்

எம்.யூ.எம். சனூன்   / 2017 ஜூலை 12 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் நகரில் சகல கிராம சேவையாளர் பிரிவுகளிலும் சிறு சிறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஆரம்பகட்டமாக புத்தளம் 8ஆம் வட்டாரக் கடற்கரையில் இதுவரை காலமும் கவனிப்பாரற்றுக் கிடந்த மிகச்சிறிய வீதிகளுக்குக் கொங்கிரீட் இடும் பணிகள், நேற்று (11) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி இளைஞர் அமைப்பாளர் எம்.என்.எம். நுஸ்கியின் வழிகாட்டலில் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு மத்திய அரசாங்கத்தால் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் அமைப்பாளர் எம்.என்.எம். நுஸ்கி தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X