2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் விபத்து ; சாரதிக்கு விளக்கமறியல்

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஜூலை 02 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் ௯றப்படும் லொறியின் சாரதியை, எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, புத்தளம் மாவட்ட மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில், சிறுவன், பெண் உட்பட ஆறு பேர் காயமடைந்த நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

புத்தளத்தில் இருந்து பாலாவியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறியொன்று, அதேதிசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போதே, இவ்விபத்து சம்பவித்துள்ளதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில், லொறியில் பயணித்த சாரதி உட்பட நான்கு பேரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் மகன் உள்ளடங்களாக ஆறு பேர் காயமடைந்த நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் சிறுவனொருவன் மாத்திரம், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான் என, புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, காயத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த விபத்துடன் சம்பந்தப்பட்ட லொறியின் சாரதி, சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியிருந்த நிலையில், மறுநாள் சனிக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான லொறியின் சாரதி, புத்தளம் மாவட்ட மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சந்தேகநபரை  எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், விபத்துக்குள்ளான லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன புத்தளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில், புத்தளம் பொலிஸார், மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X