2025 மே 05, திங்கட்கிழமை

‘பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் குற்றங்களைக் குறைக்க முடியும்’

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூன் 07 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அதிகரித்து வருகின்ற குற்றச்செயல்களுக்கு போதைப்பொருள் பாவனையே முக்கிய காரணம் எனவும் பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கினால், இவ்வாறான குற்றச்செயல்களைக் குறைக்க முடியுமெனவும், முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன் ஏக்கநாயக்கா தெரிவித்தார். 

முந்தல் பிரதேச செயலகத்தில், செவ்வாய்கிழமை நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இக்கூட்டத்தில், அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருளுக்கு அடிமையாவதால், 12 முதல் 16 வயதுக்கிடைப்பட்ட சிறுமிகள், பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகின்றனர். 14 வயதுடைய சிறுமியொருத்தி, தனது தாய்க்கு தூக்க மாத்திரையை வழங்கி விட்டு, இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபட்ட  சம்பவமொன்று, அண்மையில் இடம்பெற்றிருப்பது வேதனைக்குரியது.

எனவே, பெற்றோர்களுடன் கிராமங்களில் பணியாற்றும் அரச அதிகாரிகளும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு கண்டிப்பாகத் தேவை. பொது மக்கள் எப்போதும் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியுள்ளது.  பொலிஸாரால் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று மக்களை வழிப்புணர்வூட்ட முடியாது.

அந்தந்தப் பிரிவில் கடமையாற்றும் அரச அதிகாரிகளால் தமது பிரிவின் மக்களை விழிப்புணர்வூட்ட வேண்டும்.  அனைவரும் எப்போது கூடிய அவதானத்துடன் இருந்தால் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்” என்றார்.

முந்தல் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் நிசாந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், முந்தல் பிரதேச செயலகத்தின் அனைத்துக் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் முந்தல் பொலிஸாரும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X