2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பொலன்னறுவையில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பள உயர்வுக்கோரி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான, பொலன்னறுவை பஸ் டிப்போ  ஊழியர்கள் இன்று (16) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக,  பல வருடங்களாக உறுதிமொழிகள் வழங்கப்பட்டபோதிலும், அதனைப் பெற்றுத்தரவில்லை எனத் தெரிவித்து, இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, பொலன்னறுவை பஸ் டிப்போவுக்கு சொந்தமான 100 பஸ்கள்,இன்று (16), குறுகிய, நீண்டதூர சேவையில் ஈடுபடாத காரணத்தால், பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பள அதிகரிப்பு குறித்த தீர்வு தமக்கு  வழங்கப்படும்வரை, போராட்டத்தை தொடரவுள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X