Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூன் 08 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது வீட்டில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்ததுடன், ரி56 ரகத் துப்பாக்கி மற்றும் சிறிய ரக கைத்துப்பாக்கியையும் மறைத்து வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை, இம்மாதம் 14ஆம் திகதி வரையில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு, ஆனமடு நீதவான் திருமதி ஜயனி எஸ். விஜேதுங்க, ஆனமடு பொலிஸாருக்கு, இன்று (08) உத்தரவிட்டார்.
கற்பிட்டி, நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரையே, இவ்வாறு தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின், ஆனமடு தென்னந்துரியாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டிலிருந்து, நேற்றுப் புதன்கிழமை காலை, ரி56 ரகத் துப்பாக்கி, சிறிய ரக கைத்துப்பாக்கி என்பவற்றுடன், கசிப்புப் போத்தல்களையும் ஆனமடு பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக, பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, அங்கு சென்ற ஆனமடு பொலிஸார், அவ்வீட்டை சோதனையிட்ட போது, கசிப்பு போத்தல்கள் மீட்கப்பட்ட நிலையில், வீட்டு அறையின் அலுமாரி ஒன்றின் கீழ், பொலித்தீன் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளையும் மீட்டதோடு, குறித்த பொலிஸ் உத்தியோகத்தரையும் கைதுசெய்திருந்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை, ஆனமடு நீதவான் முன்னிலையில், ஆனமடு பொலிஸார், இன்று ஆஜர்படுத்திய போதே, அவரை இம்மாதம் 14ஆம் திகதி வரையில் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனமடு பொலிஸார், இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago