2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பொலிஸ் தினத்தையொட்டி புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் விசேட நிகழ்வு

ரஸீன் ரஸ்மின்   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

151ஆவது பொலிஸ் தினத்தையொட்டி, புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் விசேட நிகழ்வு, நேற்று (03) காலை நடைபெற்றது.

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் உள்ள விசேட விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் விதான உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

அத்துடன், யுத்தத்தின் போது உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப உறவினர்களும், அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது, யுத்தத்தில் உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களுடைய குடும்பத்தினருக்கு அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன.

அத்துடன், உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஞாபகமாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன, மரக்கன்று ஒன்றையும் நாட்டிவைத்தார்.

இதேவேளை, புத்தளம் பொலிஸ்  நிலையத்திலும் 151ஆவது பொலிஸ் தின நிகழ்வு, புத்தளம் பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன தலைமையிலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X