2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம்

எம்.யூ.எம். சனூன்   / 2017 செப்டெம்பர் 29 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புத்தளம் நகரின் மிகவும் பின்தங்கிய பிரதேசமான முள்ளிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள அஸன்குத்தூஸ் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில், போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டமொன்று, நேற்றுக் காலை இடம்பெற்றது.

அஸன்குத்தூஸ் முஸ்லிம் மஹா வித்தியால அதிபர் எச்.ஏ.ஜப்பாரின் வழிகாட்டலில், புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான சஹீரியன்ஸ் 2014 அமைப்பு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

“போதை இளமையை சீரழிக்கும்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு செயற்றிட்டத்தில் வளவாளர்களாக கொழும்பு பல்கலைக்கழக சிறுவர் உளவியல் ஆலோசகர் நதீஹா அன்சார், சஹீரியன்ஸ் 2014 அமைப்பின் அங்கத்தவர் ரசாத்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தரம் 6, 7 ,10 மற்றும் தரம்11 இல் கல்வி பயிலும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து பயன்பெற்றனர்.

போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக, மாணவர்களின் எண்ணக்கருக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது தொடர்பாக அவர்களது கருத்துகள் சித்திரங்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டன.

எமது இந்த ஆரம்ப முயற்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்த சஹீரியன்ஸ் 2014 குழுவினர், கூடிய விரைவில் புத்தளம் ஸாஹிரா, மணல்குன்று முஸ்லீம் மஹா வித்தியாலயம் மற்றும் இந்து மத்திய கல்லூரி போனறவற்றிலும் இந்த செயற்திட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X