Editorial / 2017 ஜூலை 03 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், மாரவில, நாத்தாண்டிய பகுதியில் போலி நாணயத் தாள்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாரவில பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, 5,000 ரூபாய் போலி நாணயத்தாளுடன், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் 21 மற்றும் 37 வயதுடைய மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வசமிருந்து 5,000 ரூபாய் போலி நாணயத் தாள்கள் 16, கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .