2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மாகாண அமைச்சின் அலுவலகம் திறப்பு

Princiya Dixci   / 2016 ஜனவரி 30 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

வடமேல் மாகாண கல்வி, கலை மற்றும் கலாசார, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார, தகவல் தொழில்நுட்ப அமைச்சின் புத்தளம் மாவட்டத்துக்கான அலுவலகம், நேற்று வெள்ளிக்கிழமை (29) சிலாபம்,முன்னேஸ்வரம் வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

மாகாண அமைச்சர் சந்தியா எஸ். குமார ராஜபக்ஸவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் சுமல் திசேரா, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த, மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ் அலுவலகம் சிலாபத்தில் திறக்கப்பட்டதன் மூலம் புத்தளம் மாவட்ட மக்கள் தங்களது தேவைகளினை சிலாபத்திலேயே பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X