2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மோசடி செய்த மூவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஷாஜஹான்

நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள விற்பனை நிலையங்களில் கட்டுப்பணம் செலுத்துவதாகக் கூறி மோசடியான முறையில் 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் மற்றும் வீட்டுத்தளபாட பொருட்களை வாங்கிய மூவரையும் எதிர்வரும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டார்.

இம்மூவரையும் கடந்த வியாழக்கிழமை (10) பொலிஸார் கைதுசெய்திருந்தனர். 

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர்கள், பொருட்களை வெளிநாட்டில் இருந்து வந்த நபர் போன்று ஒருவர் நடிக்க, மற்றையவர்கள் அதற்குப் பிணை நிற்பது போன்று கையெழுத்திட்டு பொருட்களை சொற்ப பணத்தைக் கட்டியதுடன், மிகுதிப்பணத்துக்கு போலிக் காசோலையை வழங்கி விட்டுச்சென்றுள்ளனர். பல வர்த்தக நிலையங்களிலும் இவ்வாறே இவர்கள் செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து ஷேhபா செட், 11 தொலைக்காட்சிகள், கட்டில், 3 மின்விசிறிகள், எரிவாயு அடுப்பு, மோட்டார் சைக்கிள் மற்றும் டைனிங் டேபிள் உட்பட கதிரைகள் 8ஐயும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இவர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X