2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு

Gavitha   / 2016 ஜனவரி 23 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் வடக்கு கல்வி கோட்டத்துக்குட்பட்ட புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி விஞ்ஞானக்கல்லூரியின் இவ்வருடத்துக்கான மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (22) காலை கல்லூரியின் வளாகத்தில் இடம்பெற்றது.

மேற்படி கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு ஆறாவது வருட நிறைவை முன்னிட்டு 'இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் ' எனும் மணி மகுடத்தின் கீழ், இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

கல்லூரி முதல்வர் ஐ.எல். சிராஜூதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக புத்தளம் வடக்கு கல்வி கோட்ட கல்வி பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.சி.எம். மஹ்ரூப் கலந்து கொண்டார். புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பிரதி அதிபர் ரஜியா சபீவுத்தீன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.ஓ. நஜீப் உள்ளிட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

05 சிரேஷ்ட மாணவ தலைவர்கள் உள்ளிட்ட 26 மாணவ தலைவர்களுக்கு,  இதன்போது சின்னங்கள்அணிவிக்கப்பட்டன. சிரேஷ்ட மாணவர் தலைவர் எம்.எப்.பத்ஹி முஹம்மத் தலைமையில்  அனைத்து மாணவர் தலைவர்களும் உறுதி  மொழியையும் எடுத்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X