2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

முந்தலம் பள்ளியில் கைகலப்பு; 14 பேர் கைது

Kogilavani   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம்-முந்தலம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாயல் ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட கைகலப்பை தொடர்ந்து 14 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி பள்ளியில் தொழுகை முடிந்த பின்பு வழங்கப்படும் நலன்புரி உதவிகள் தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடே கைகலப்பாக மாறியுள்ளது. இதனை பள்ளிவாயல் நிர்வாகம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டபோதும் முயற்சி பலனிக்கவில்லை.

இந்நிலையில், முந்தலம பொலிஸார் வரவைழக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன்போது கைதான 14 பேரையும் பொலிஸார் எச்சரிக்கை செய்து பின்னர் விடுதலை செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X