2025 மே 05, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்துவந்த ஒருவர், மின்சாரம் தாக்கி இன்று காலை உயிரிழந்துள்ளதாக, தங்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எல்.துஷ்ரந்த தெரிவித்தார்.

வரகாபொல கலபிமட பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் எனவும் அவர் கூறினார்.

கொழும்பு, வெள்ளவத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான குறித்த தொழிற்சாலையில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சடலம், தங்கொட்டுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம், மாறாவில வைத்தியசாலைக்கு பிரேதச பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தங்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எல்.துஷ்ரந்த மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X