2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மின்சாரம் தாக்கி மாணவி பலி

Princiya Dixci   / 2016 மே 04 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகவில்லு எருக்கலம்பிட்டியில் மின்சாரத் தாக்குதலுக்குள்ளான மாணவியொருவர், நேற்று செவ்வாய்க்கிழமை (03) மாலை உயிரிழந்துள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நாகவில்லு எருக்கலம்பிட்டி 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜபருள்ளா பாத்திமா நிப்லா (வயது 16) எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரன தரத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவி, வீட்டில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த மாணவி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அங்கு சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த மாணவியின் ஜனாஸா, புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .