Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 17 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-துஷார தென்னனோன்
பொலன்னறுவை தனியார் நிறுவன ஊழியர்களை எந்த விதமான முன்னறிவித்தலும் இன்றி வேலையிலிருந்து நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தங்களை உடனடியாக வேலையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரியும் பொலன்னறுவையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொலன்னறுவை கல்விகாரை நுழைவாயிலை மறித்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று திங்கட்கிழமை (16) முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
2014.03.17 ஆம் திகதியில் இருந்து இன்று வரை சுமார் இரண்டு வருடமாக தொழில் புரிகின்றோம். ஆனால், எவ்விதமான அறிவிப்பும் இன்றி குறித்த நிறுவனம் எங்களை கடந்த ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதியன்று வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
வேலையிலிருந்து நீக்கியமையால், சுமார் 58 பேர் வரையான ஊழியர்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுகின்றனர்.
தாங்கள் மட்டுமல்ல தங்களை தங்கி வாழ்வோரும் பல்வேறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகவும் அதனால், குறித்த வேலையை மீண்டும் பெற்றுத்தருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago