Princiya Dixci / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு புத்தளம் நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தளம் நகர முன்பள்ளி மாணவர்களுக்கிடையிலான நிறம் தீட்டும் போட்டி, புத்தளம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (21) காலை நடைபெற்றது.
புத்தளம் நகர சபையினால் வருடாந்தம் நடத்தப்படும் கவிதை, கட்டுரை மற்றும் அரபு எழுத்தணி போட்டிகளின் வரிசையில் இந்த முன்பள்ளி மாணவர்களுக்கான நிறம் தீட்டும் போட்டியும் நடைபெற்றது.
புத்தளம் நகர சபையினால் இறுதியாக நடத்தப்பட்ட இப்போட்டியில், புத்தளம் நகர சபையில் பதிவாகியுள்ள 39 முன்பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்றனர்.
புத்தளம் நகர சபையின் செயலாளர் டபிள்யு.ஜி.நிஷாந்த குமார பிரதம அதிதியாக கலந்துகொண்டு இப்போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
முன்பள்ளி மாணவர்களுக்கான இந்த நிறம் தீட்டும் போட்டியில் புத்தளம் ஐ.எப்.எம். முன்பள்ளி மாணவி பாத்திமா பைஹா முதலிடம் பெற்றார்.

26 minute ago
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
1 hours ago