2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மகளிர் தினத்தில் துக்கம் அனுஷ்டிப்பு

Princiya Dixci   / 2016 மார்ச் 10 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் பெண்கெளுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து அவற்றுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் புத்தளம் பாலாவி சந்தியில் மகளிர் தினத்தன்று (08) பெண்கள் இணைந்து மௌன துக்க தின நிகழ்வொன்றினை அனுஷ்டித்தனர்.

புத்தளம், பாலாவி பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண பெண்கள் அமைப்பினர் கறுப்பு உடை அணிந்து இந்த மௌன துக்க தின நிகழ்வில் கலந்துகொண்டதோடு, மகளிர் தினத்தினையும், இந்த மாதம் முழுவதையும் இருண்ட நாட்களாகப்  பிரகடனப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X